நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, தோல்நோய் போன்றவற்றிக்கு எளிதில் கிடைக்கும் இந்த பழம் அருமருந்தாகும்!

அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பழம் வாழை பழம். எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. செவ்வாழை, கற்பூரவள்ளி வாழைப்பழம், நேந்திரம் வாழைப்பழம், ஏலக்கி வாழை பழம், இது போல் எண்ணற்ற வகை உண்டு. அவற்றில் உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. செவ்வாழை பழம் தவிர மற்ற அனைத்து வகை வாழை பழங்களும் அனைவரும் உண்ணுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல நோய்களை தீர்க்கவள்ளது. பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

இன்று அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது வாழை பழம் குறிப்பாக செவ்வாழை அமெரிக்க, கியூபா, செவ்வாழையின் தாயகம் எனக் கூறப்படுகிறது.

  1. பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும்.
  2. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.
  3. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
  4. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.
  5. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது.
  6. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய்:

இன்றைய காலங்களில் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவிற்கு பின்னர் தொடர்ந்து ஒரு மாதம் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும்:

இன்றைய நாகரீக உலகில் உபயோகிக்கும் பல் துலக்கும் பேஸ்டுகளில் உப்பு இருக்க என்று தான் விளம்பரம் செய்கின்றனர். அப்படி இருக்க கால்சியம், புளோரைடு குறைபாட்டினால் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து ஒரு மாதம் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்:

உடலில் தோல் வறட்சி வியர்வை படிவதால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும் இதற்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்:

சத்தற்ற உணவை சாப்பிட நரம்பு தளர்ச்சி ஏற்படும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.ஆண்மை பெறுகும்.

குழந்தை இன்மை:


திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ சந்திப்பார். அவர்களுக்கு செவ்வாழை மருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் படிக்க : இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

தொற்றுநோய் தடுக்கப்படும்:

நவீன உலகில் பலறும் பணத்தை தேடி அங்கும் இங்கும் அழைக்கின்றனர்.இதனால் பல இடங்களில் தொற்று நோய் கிருமிகள் தாக்குகின்றனர். தொற்று கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

மேலும் படிக்க : கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

இவ்வாறு பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட செவ்வாழை பழத்தை தவறாது சாப்பிட்டு பயனடைய வேண்டும்.

மேலும் படிக்க : பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Copy
WhatsApp chat