வேலூர் தேர்தல்! திமுகவின் கடன் தள்ளுபடிகள்,இலவசங்கள் கை கொடுக்குமா? ஒரு பார்வை.

0
99

வேலூர் தேர்தல்! திமுகவின் கடன் தள்ளுபடிகள்,இலவசங்கள் கை கொடுக்குமா? ஒரு பார்வை.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூறிய வாக்குறுதிகள் வேலூர் இடைத்தேர்தலில் எடுபடுமா? வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. களத்தில் 28 வேட்பாளர்கள் உள்ளனர்.

இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
ஏ.சி.சண்முகத்துக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிமுக தலைமை 200 பேர் கொண்ட பிரமாண்ட பொறுப்பாளர்கள் படையை அறிவித்துள்ளது.

திமுகவும் அதற்கு ஏற்றார் போல் ஒரு குழுவை அமைத்து தேர்தல் பணியை செய்து வருகின்றன. இந்த வேலூர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென இரண்டு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒரு வினா எழுந்துள்ளது. அவ்வினா என்னவெனில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சில அறிக்கைகளை வெளியிட்டு வெற்றி பெற்றது. அந்த அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி, நகைகடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி போன்ற தள்ளுபடிகளை அறிவித்து வெற்றி பெற்றது.

திமுக குடுத்த அறிக்கையை நடைமுறை படுத்த முடியாத சூழல். ஏனெனில் மத்தியில் திமுக தலைமை பொறுப்பு ஏற்ற கட்சி காங்கிரஸ் ஆகும். ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இல்லை. அப்படி இருக்க திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அதிமுக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூறுவது யாதெனில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து திமுக அதே தேர்தல் அறிக்கையையே வேலூரில் பயன்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி ஆகுமா? வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் தள்ளுபடி ஆகுமா என விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

மேலும் படிக்க : நாடாளுமன்றத்தில் கன்னி உரையிலேயே கலக்கிய திமுகவின் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்

நாகர்கோவிலில் ஒரு வங்கியில் விவசாயிகள் விவசாய கடன் தள்ளுபடி ஆகுமா என்ற கேள்வி எழுப்பி உள்ளனர். இதை மேலும் விவரம் சேகரிக்க நாகர்கோவில் வங்கியின் விவசாய கடன் உதவி மேலாளர் திரு. இரகு மகேந்திரன் கூறியதாவது, விவசாய கடன் தள்ளுபடி செய்ய வில்லை என உறுதி அளித்தார்.

மேலும் படிக்க : பிஜேபியுடன் திமுக இணைந்ததா? இனி என்ன நடக்கும் திமுகவில்?

திமுக எந்த தேர்தல் அறிக்கையை வேலூர் தேர்தலில் பயன் படுத்தும் என தெரியவில்லை. மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள், அமைச்சர்கள் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள ஹோட்டல் விடுதிகளில் அறையெடுத்து தாங்கியுள்ளனர். இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகை போன்ற காரணங்களால் வேலூர் தொகுதி முழுவதும் பிற மாவட்ட கரை வேட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

திமுகவின் நகைக்கடன், விவசாயக் கடன், கல்வி கடன் போன்ற இலவசங்கள் மற்றும் தள்ளுபடி அறிக்கைகள் எடுபடுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K