பிஜேபியுடன் திமுக இணைந்ததா? இனி என்ன நடக்கும் திமுகவில்?

0
141

பிஜேபியுடன் திமுக இணைந்ததா? இனி என்ன நடக்கும் திமுகவில்?

திமுக பிஜேபியுடன் இணைந்தது!
மக்களவையில் அமித்ஷா அவர்கள் தீவரவாத செயல்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்க மக்களவையில் ஆதரவு கோரினார். அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிஜேபியின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர். இதனால் என். ஐ.ஏ அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். இதனால் இசுலாமிய அமைப்புகள் கொதிப்படைந்தனர்.

மேலும் திமுகவின் இளைஞர் அணி தலைவராக உதயநிதி தேர்ந்தெடுத்தது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ஸ்டாலின் தொலைகாட்சி பொது நிகழ்ச்சியில் பேசும் பொழுது வாரிசு அரசியலை உருவாக்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டு உதயநிதியை அரசியலில் கொண்டு வந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

இதனால், திமுகவின் சீனியர்கள் சிலர் கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர். அதுமட்டும் அல்லாது திமுக, எம்.பி.,க்கள் மீது வழக்குகள் உள்ளதால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டு எந்நேரமும் இடைத்தேர்தல் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அக்கட்சியினர் அதிர்ப்தியில் உள்ளனர்.

மேலும் மக்களவையில் நடைபெற்ற அமித்ஷா கோரிக்கைக்கு என்.ஐ.ஏ.அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்திற்கு ஆதரவாக தி.மு.க வாக்களித்தது இஸ்லாமியர்களை கொதிப்படைய செய்துள்ளது.

இதனால் திமுகவிற்கு இங்கு ஒரு முகம் அங்கு முகம் என தி.மு.கவை ஓரங்கட்டி வருகின்றனர் இஸ்லாமியர்கள். இதனால் தி.மு.கவில் இருந்தால் மரியாதையும் இல்லை அதிகாரமும் இல்லை என புலம்பி வருகின்றனர் திமுக மூத்த தலைவர்கள்.

திமுகவை சேர்ந்தவர்களின் பார்வை பா.ஜ.க மீது திரும்பியுள்ளதாக தகவல். பிரதமர் மோடியிடம் நெருக்கமாக உள்ள வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கரிடம் ஏற்கனவே 4 எம்.பிக்கள் தூது விட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதே போல் அதிருப்தியில் உள்ள தி.மு.கவின் மூத்த தலைவர்கள் டெல்லி வட்டாரங்களுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் கர்நாடக அரசியலை அடுத்து பாஜகவின் கை தமிழகத்தின் மீது நீள உள்ளது என்கிறார்கள். இன்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மோடி நினைத்தால் திமுக பஸ்பம் ஆகிவிடும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K