தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

0
210

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு இந்திய அணி வெளியேறியது.

உலகக்கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு தோனியின் ஓய்வு குறித்து தான் கிரிக்கெட் வீரர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் விவாதமாக இருந்து வருகிறது. தினமும் இவரது ஓய்வு குறித்த செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. ஆனால், தோனி தரப்பில் இந்த விவாதம் மற்றும் வதந்திகள் குறித்த எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை.

அதேநேரம் இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தத் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இந்த தொடரில் தோனி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்த வந்த நிலையில், இனி வரும் காலங்களில் தோனி விக்கெட் கீப்பருக்கான சாய்ஸில் முதலில் இருக்க மாட்டார்.

மேலும் படிக்க: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸாக பன்ட்தான் இருப்பார். அவர் தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள நேரம் வழங்கப்படும். இனிவரும் காலங்களில் தோனி 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இருப்பார். ஆனால், ப்ளேயிங் லெவனில் கொஞ்சம் கஷ்டம்தான். இந்திய அணிக்கு தொடர்ந்து அவரின் வழிக்காட்டுதல் நிச்சயம் தேவை. அவர் அணியிலிருந்து விலகுவது என்பது ஆரோக்கியமானதாக இருக்காது” எனவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய அணி அடுத்தடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் தோனி ஓய்வை அறிவிப்பார் எனவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடக்கவுள்ள தொடரில் இருந்து தோனி விலகியுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “தோனி  மேற்கிந்தியத் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அவர் சிறிது காலம் ஓய்வு எடுக்க விருப்புவதாக தெரிவித்தவர், அடுத்ததாக இந்திய ராணுவத்தில் தனது பணியை முழுநேரமாக தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்” என கூறினார். மேலும் ஏற்கனவே கூறிய படி தோனிக்கு பதிலாக பந்த் இந்த தொடரில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தோனி இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராணுவ வீரர்களுடன் உரையாடுவதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இது மட்டுமில்லாமல் தோனி விளையாடும் வீடியோ கேம்ஸ் கூட ஆர்மி சம்பந்தமானதாகத் தான் இருக்கும் என விராட் கோலியே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் படி தான் இந்தமுறையும் ராணுவ வீரர்களை அவர் சந்திக்கவுள்ளார். இந்நிலையில் இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனிக்குப் பதிலாக பந்த் முழுநேர கீப்பராக செயல்படப்போவது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க: உலக கோப்பை போட்டிக்கு பிறகு தோனி தீவிர அரசியலில் ஈடுபட போகிறாரா?

Latest News about Dhoni Retirement-News4 Tamil Online Tamil News-Sports News-Cricket News in Tamil

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K