சோமோட்டோ நிறுவனம் ஆதரவும்! எதிர்ப்பும்! காரணம் யார்? ஏன்? #boycottzomato

0
70

சோமோட்டோ நிறுவனம் ஆதரவும்! எதிர்ப்பும்! காரணம் யார்? ஏன்? #boycottzomato

Zomato இன்றைய நவீன உலகில் இந்த பெயர் பெரும்பாலானோர் அறிந்திருக்க கூடும். இன்றைய பரப்பான உலகில் அனைவரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடுவதை விட ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்து உள்ளது .ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் தற்போது முன்னிலையில் சோமாட்டோ நிறுவனம் உள்ளது.

சரி சங்கதிக்கு வருவோம் Zomato வில் மத்திய பிரதேசத்தை சார்ந்த ஒருவர் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்து உள்ளார்.உணவு டெலிவரி செய்பவர் இந்து அல்லாத ஒருவர் என்பதால் அந்த உணவை வாங்க மறுத்துவிட்டார்.
அதற்கான காரணத்தை தனது ட்விட்டரில் கூறிய அவர் ‘ இந்து அல்லாத ஒருவர் உணவு கொடுத்ததால் அந்த உணவை நிராகரித்து விட்டேன். நான் உணவு கொடுப்பவரை மாற்ற கோரினேன்.ஆனால் அவர்கள் அவரை மாற்ற வில்லை.

அவர்களித்தில் எனது பணத்தையும் திருப்பி கேட்டேன் அவர்கள் திருப்பி தரவில்லை.
உணவுவை வாங்கும் படி என்னை கட்டாயப்படுத்த கூடாது.எனக்கு என் பணம் திரும்ப வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் வேறு மதத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆர்டரை ரத்து செய்ததற்கு பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோபமடைந்த வாடிக்கையாளர் அந்த நிறுவனத்திற்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலடியாக Zomato நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்தது. அதாவது, உணவுக்கு மதம் கிடையாது.உணவே ஒரு மதம் தான் என கூறியுள்ளது.

Zomato நிறுவனத்தின் இந்த பதிலுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பலர் வாடிக்கையாளருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்காக #boycottzomato மற்றும் #standwithzomato என்றும் மாறிமாறி ஆதரவு அளித்து வருகின்றனர் டிவிட்டர் வாசிகள்.

சாதி மதமற்ற அரசியல் செய்கிறோம் என கூறிக்கொண்டு பெரும்பாலான கட்சிகள் குறிப்பிட்ட சில சமுதாயம் மற்றும் மதங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதும் மற்ற மதத்திற்கு எதிராக செயல்படுவதும் வழக்கமாக கொண்டுள்ளன. அதாவது சிறுபான்மையருக்கு ஆதரவு என்கிற பெயரில் அவர்களே தவறு செய்தால் கூட கண்டு கொள்ளாமல் இருப்பதும் அதுவே அவர்களுக்கு எதிராக சிறு பிரச்சனை எழுந்தால் கூட அதை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளின் வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய உருவான இது போன்ற நிறுவனங்களும் அவர்களுக்கு பிடித்ததை வாடிக்கையாளர்களுக்கு திணிப்பது, ஒரு சாராரை கவர மற்ற வரை குறை கூறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகி விட்டது.

இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த மதங்களையும் அதன் சடங்குகளையும் பின்பற்ற உரிமையுள்ள நிலையில் வியாபாரத்திற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் இந்தியர்களின் அடிப்படை உரிமையில் தலையிடுவது பொது மக்கள் மத்தியில் அதிர்ப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : பிரச்சாரத்தில் திருமாவளவன் புறக்கணிப்பா? கூட்டணியில் சிக்கலா? விளக்கம் தரும் திமுக?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K