கறுப்பர் கூட்டம் வீடியோ தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் சி.வி.சண்முகம்

0
74

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் பக்கத்தில் தமிழ்கடவுகள் முருகனை பற்றியும், இந்து மதங்களை பற்றியும் இழிவான கருத்துகளை பேசி தரக்குறைவாக வீடியோவை பதிவு செய்து வந்துள்ளனர். சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் பற்றி தவறான புரிதலுடன் ஒரு வீடியோவை கறுப்பர் கூட்டம் வெளியிட்டது. இது பலரது மத்தியில் அதிருப்தியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் விழுப்புரம், கடலூர் எல்லை பகுதி அருகேயுள்ள சின்னக்கள்ளிப்பட்டியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ரூ.33 கோடியில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டினார். இதன்பின்னர் இவர் கூறுகையில், தமிழகத்தில் ஒற்றுமையாக இருக்கும் மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் கடைபிடுத்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். கறுப்பர் கூட்டம் என்கிற யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ விவகாரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

 

கறுப்பர் கூட்டம் இணைய பக்கத்தில் செயல்படும் நபர்கள் சாதியொழிப்பு, சனாதன எதிர்ப்பு என்று தொடர்ந்து பேசிவந்த நிலையில், அவர்கள் வெளியிட்ட கந்த சஷ்டி வீடியோவிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், தாங்களும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள்தான் என்று பயந்து பம்மியுள்ளனர்.

 

இதைப்போலவே பல்வேறு ஆங்கில பெயர்களில் இணைய பக்கங்களை உருவாக்கி அதில் இந்துக்களுக்கு எதிரான காணொளிகளை வெளியிடும் நபர்களின் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால் பல்வேறு பிரச்சினை எழாமல் இருக்கும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

author avatar
Jayachandiran