கொரோனா வைரஸ் பீதி:இருந்தாலும் குத்தாட்டம் போடும் இந்தியர்கள்!

0
88

கொரோனா வைரஸ் பீதி:இருந்தாலும் குத்தாட்டம் போடும் இந்தியர்கள்!

கொரோனா வைரஸ் பீதி காரணமாக சீனாவில் இருந்து இந்தியா வரவழைக்கப்பட்ட சிலர் மருத்துவ முகாம்களில் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளதாக சீன அரசு ஒத்துக்கொண்டுள்ளது. அதேபோல இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்றும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் சீனாவில் இந்த 647 பேர் இரு விமானங்களில் அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தின் ஓடுபாதைக்கருகே அவர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அதில் வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதல் சந்தேகம் உள்ளவர்கள் மனசேரியில் உள்ள மருத்துவ முகாம்களில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு இருக்கும் சிலர் இப்போது இந்தி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இப்போது வைரல் ஆகியுள்ளது. இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொண்டு நடனம் ஆடி மகிழ்ச்சியாக இருப்பதற்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் அவர்களுக்காக பிராத்தனை செய்வதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K