தொடர்ச்சியாக பப்ஜி கேம் விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

0
77

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் வீடியோ கேமில் மூழ்கி அதிலேயே அவர்கள் மணிக்கணக்காக நேரத்தை செலவிடுவதால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை சில சமயம் ஏற்படுகிறது. இந்த கேமை தொடர்ச்சியாக விளையாடக்கூடாது என்று பெற்றோர் கட்டுப்படுத்தினால் அவர்கள் கடும் கோபமடைந்து விபரீதமான முடிவுகளை எடுத்து வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹமீம் மிர்சன் என்ற இளைஞர் கடந்த சில தினங்களாக அவரது வீட்டில் பாப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தொடர்ச்சியாக அவரது அந்த கேமை விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கேம் விளையாடி கொண்டிருந்தபோதே திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்ந்தபோது அவரது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார். தொடர்ச்சியாக அதிக நேரம் அதிக ஆர்வத்துடன் பப்ஜிகேம் விளையாடும் போது மூளைக்குச் செல்லும் ரத்தம் பாதிக்கப்படும் என்றும் எனவே எந்த ஒரு கேமாக இருந்தாலும் சில குறிப்பிட்ட நேரம் மட்டுமே அந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பப்ஜி கேம் மட்டும் என்று எந்த கேமாக இருந்தாலும் சரி மொபைலில் விளையாடும் கேமாக இருந்தாலும் சரி, குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதை பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கேம் விளையாடுவதால் உயிரிழப்பு ஏற்படுவது என்பது இது முதல் முறை அல்ல என்றும் இனியாவது பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

author avatar
CineDesk