Connect with us

Breaking News

அழைப்பை துண்டித்த காதலி… தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

Published

on

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (27). இவர் அந்த பகுதியில் லாரி ஓட்டுநராக இருந்து வரும் இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். மதுபோதையில் தாயுடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக அவரது நண்பர்களின் அறையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

சம்பவதன்று, மது போதையில் அந்த பள்ளி மாணவியுடன் வீடியோகாலில் பேசி வந்துள்ளார். அப்போது அவர் அந்த மாணவியிடம் எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி பள்ளி முடித்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மாணவியின் தாய் வந்து விட்டதால் அவர் அழைப்பை துண்டித்துள்ளார்.

மீண்டும் அந்த சிறுமியை தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர், கருப்புசாமியின் தாய் மற்றும் சகோதரியை தொடர்பு கொண்ட அந்த சிறுமி கருப்பசாமி தற்கொலை செய்து கொள்வதாக கூறியதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர்.

Advertisement

அப்போது அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement