திருமணமாகாத பெண்களை குறி வைத்து மோசடி… நகை பணத்துடன் தப்பிய இளைஞர்..!

0
237

திருமணம் மையம் மூலம் இளம்பெண்களிடம் பழகி நகைகளை பறித்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னர் எல்லாம் திருமணம் செய்ய மணமகன் அல்லது மணமகளை உறவினர்கள் மூலம் தெரிந்தவர்கள் மூலம் கண்டறிந்து மண வாழ்க்கையில் இணைவர். தற்போதுள்ள நிலையில், திருமண மையங்கள் மூலம் தங்களின் இணையை தேர்ந்தேடுத்து கொள்கின்றனர். அதே போல புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் மையம் ஒன்றில் தனது விபரங்களை பகிர்ந்து மாப்பிள்ளை தேடியுள்ளார்.

இதனை கண்ட வேலூர் காந்திநகரைச் சேர்ந்த முகமது உபேஸ் என்பவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு அவரை பிடித்து இருப்பதாகவும் நேரில் சந்திக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு அந்த பெண்ணும் சம்மதித்து டிசம்பர் மாதம் 13-ந் தேதி உபேசனை சந்தித்தார்.அப்போது அந்த பெண்ணிடம் தனக்கு அவசரமாக பணம் தேவை என கேட்ட அவர் அந்த பெண்ணின் நகையை கேட்டுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணும் 20 பவுன் நகையை உபேசிடம் கொடுத்தார்.

அதன்பின்னர்,உபேசன் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். அவரை தொடர்ப்பு கொள்ள முடியாமல் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உபேசை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் திருமணமாகாத பெண்கள், மறுமணம் செய்ய பதிவு செய்தவர்களை குறிவைத்து திருமண ஆசை காட்டி நகை பணம் பறித்ததை ஒப்புகொண்டார். இதனை அடுத்து, அவரிடம் இருந்த லட்சம் ரூபாய் ரொக்கம், 1½ பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.