Connect with us

Breaking News

முதியவரை திருமணம் செய்த சில நாட்களிலேயே நகை , பணத்துடன் இளம்பெண் மாயம்..!

Published

on

முதியவரை திருமணம் செய்த பெண் நகைகளுடன் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், காட்டன்பேட்டை அருகே ஓ.டி.சி. பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அச்சு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து விட்டு தனியே வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

Advertisement

அதற்காக திருமண புரோக்கர் முனியம்மா என்பவர் மூலம் திண்டுக்கல்லை சேர்ந்த மல்லிகா என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார். அதற்காக அவரை திண்டுக்கல் வரவழைத்து வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். சில நாட்களுக்கு பின், அவர் மாயமானார். அவருடன் பீரோவில் இருந்த64 கிராம் தங்க நகைகள், 700 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் சுமார் 2 லட்சம் ரூபாய் காணாமல் போனது.

இதனால், அதிர்ச்சியடைந்த முதியவர் முனியம்மாவிடம் கேட்டுள்ளார். ஆனால், முனியம்மாள் இதற்கு தனக்கு எதுவும் தெரியாது என கூறவே காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து, மாயமான மல்லிகாவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement