காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!!

0
125
#image_title

காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!!

கோடைக் காலம் தொடங்கியவுடன் மக்கள் நீர்வீழ்ச்சி, அருவிகளிலும், கடற்கரைகளிலும் படையெடுக்க தொடங்குவார்கள்.

கோடைக் காலம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலாவாக குழந்தைகளுடன் சென்று அருவி, கடல், ஏரிகளிலும் கூட நீராடி மகிழ்வார்கள்.

தேனி மாவட்டம் சுருளி அருவி, திற்பரப்பு அருவி, கொடைக்கானலில் உள்ள ஐந்தருவி என பல்வேறு அருவிகளில் மக்கள் குளிப்பது வழக்கம். ஆனால் தற்போது ஒரு வித்தியாசமான குளியலை அதுவும் ஆண்கள் அனுபவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டியில் காவிரி கூட்டி குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இக்குடிநீர் குழாய் உடைப்பால் சுமார் ஆறு அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி மேல பாய்கிறது.

வீணாய் போகும் குடிநீரை மக்கள், குடங்களில், பானைகளில் பிடித்து சேமிக்காமல், சற்று வித்தியாசமாக செய்தனர் அதாவது, சுற்று வட்டாரப் பகுதி மக்கள் குறிப்பாக ஆண்கள் பீய்ச்சு அடிக்கும் தண்ணீரில் ஆனந்த குளியலிட்டு, குடிநீரில் குளித்து வருகின்றனர்.

இந்த தண்ணீரில் குறிப்பாக இளைஞர்கள் உற்சாகமாக குளிக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. மற்றொருபுறம் காவிரி கூட்டு குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெயில் காலத்துல தான் தண்ணியோட அருமையே தெரியவருது ஒரு சொட்டு தண்ணிய கூட வீணாக்க கூடாதுனு பெரியவுங்க சும்மாவா சொன்னாங்க அவுங்க சொன்னதெல்லாம் ஒருவகையில உண்மை தான் .

அடிக்கிற வெயிலுக்கு தண்ணிய பார்க்குறதே பெருசா இருக்கு இதுல காவேரி தண்ணி சும்மா கிடைச்சா சும்மா இருப்பாங்களா நம்ம ஊரு பசங்க.. என்று நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு கலாய்த்து வருகின்றனர்.