அஜீத்துடன் முதன் முறையாக இணையும் இளம் இசையமைப்பாளர்

0
97

அஜீத்துடன் முதன் முறையாக இணையும் இளம் இசையமைப்பாளர்

அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் – எச்.வினோத் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்கள். இதையும் போனி கபூரே தயாரிக்க முன்வந்துள்ளார். இந்தப் படம் முழுக்க ஆக்‌ஷன் பின்னணி கொண்ட கதைக்களம் என்று இயக்குநர் எச்.வினோத் தரப்பிலிருந்து தெரிவித்தார்கள்.

இந்நிலையில் மீண்டும் அஜித் – எச்.வினோத் இணையவுள்ள படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளர் என்று தகவல் வெளியானது. ஆனால், முன்பே ஒப்புக்கொண்ட பணிகள் இருப்பதால் புதிய படங்கள் எதையுமே நான் ஒப்புக் கொள்ளவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அஜித் – எச்.வினோத் கூட்டணி படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
‘தல 60’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் தான் இசையமைப்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலிருந்தே எச்.வினோத் – ஜிப்ரான் நல்ல நண்பர்களாக வலம் வருகிறார்கள்.

இதனால், ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் அஜித் – ஜிப்ரான் சந்திப்பு நடந்திருப்பதால், இந்தப் புதிய கூட்டணிக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார்கள்.
முழுக்க வெளிநாட்டில் காட்சிப்படுத்தப்படவுள்ள இந்தப் படத்தின் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்குகிறது.

2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது
அடிச்சுத் தூக்குங்க ஜிப்ரான்..!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K