இத படிச்சா நீங்க இனிமே சுவிங்கம் சாப்பிட மாட்டீங்க!! குழந்தைகளே ஜாக்கிரதை!!

0
87
You will never eat this again !! Beware children !!
You will never eat this again !! Beware children !!

இத படிச்சா நீங்க இனிமே சுவிங்கம் சாப்பிட மாட்டீங்க!! குழந்தைகளே ஜாக்கிரதை!!

சுவிங்கம் சாப்பிட்டுவிட்டு அதில் வரும் முட்டைகளை பார்த்து ரசிப்பது  தனி சுவாரஸ்யம் தான். ஆனால் அப்படி சாப்பிடும் சுவிங்கத்தை சாப்பிடும் பொழுது தெரியாமல் அதை நம்மில் பலர் விழுங்கி இருப்போம். அப்பொழுது ஒரு கேள்வி எழும்பும் அந்த கேள்வி அந்த சுவிங்கம் நம் வயிற்றில் ஒட்டிக் கொள்ளுமா? என்பது தான், ஆனால் உண்மையில் நாம் விளங்கிய அந்த சுவிங்கம் வயிற்றுக்குள் என்ன செய்யும் தெரியுமா?

நாம் அன்றாட வாழ்வில் உட்கொள்ளும் உணவுகளை நம் வயிறு ஏற்றுக்கொள்ளும். ஆனால் நம் உட்கொள்ளும் உணவு எப்படிப்பட்ட உணவாக இருக்க வேண்டும் என்றாள், சிறுசிறு துகள்களாக மாற்றப்பட்ட உணவாக இருக்க வேண்டும், அதாவது நாம் உட்கொள்ளும் அனைத்து உணவையும் நாம் வாயில் மென்று தான் விழுங்குகிறோம், அதனால் அனைத்து உணவும் சிறிது சிறிது துகள்களாக தான் வயிற்றுக்குள் செல்கிறது. பிறகு தான் நம் வயிறு அந்த உணவை ஏற்றுக் கொள்கிறது. இந்த நிலையில் நாம் சுவிங்கத்தை விழுங்கும் பொழுது அது சிறிய துகள்களாக மாறாது. ஏனெனில்சுவிங்கத்தின் தன்மையை நம் எவ்வளவும் மென்றாலும் அது ரப்பர் போன்று தான் இருக்கும். ஆகையால் அந்த சுவிங்கத்தை நாம் விழுங்கும் பொழுது நம் உடம்பில் ஒட்டிக் கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் வயிற்றில் ஏற்படும் வேலைகளில் சுவிங்கம் ஒன்று சேராது நம் வயிறு  ஏற்றுக்கொள்ளாது இதனால் 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு தான் குடல் வழியாக வெளியேறும். இதே போல் நம் எப்போவாவது ஒருமுறை விழுங்கிய சுவிங்கத்திற்கும் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

ஆனால் தினமும் ஒரு ஒரு சுவிங்கத்தை விழுங்கும் பொழுது அந்த ஒரு ஒரு சுவிங்கம் வெளியேற ஒன்றிலிருந்து நான்கு நாட்கள் ஆகிறதாம். அதனால் அந்தச் சுவிங்கம் நம் வயிற்றுக்குள்ளேயே தங்கிவிடும். இதனால் நம் வயிற்றில் உள்ள கூடலில் பல அடைப்புகள் ஏற்படும். இதனால் நமக்கு தாங்க முடியாத அளவில் வயிற்று வலி ஏற்படுமாம். இந்த பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே சுவிங்கத்தை நீங்கள் வெளியே துப்புவது நல்லது.

author avatar
CineDesk