இனி இந்த தேதியில் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும்! மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
82
You no longer have to pay electricity bills on this date! Important Announcement by the E-Board!
You no longer have to pay electricity bills on this date! Important Announcement by the E-Board!

இனி இந்த தேதியில் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும்! மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தற்பொழுது தமிழகத்தில் மின்வாரியத்தில் அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் எடுத்து வருகிறது. மின்வாரியம் தமிழகத்தில் தமிழகத்தில் உள்ள வீடுகள் திரையரங்குகள் மருத்துவமனைகள் வணிக வளாகங்கள் தொழில் ரீதியான அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் விநியோகித்து வருகிறது.மேலும் இரு மாதத்திற்கு ஒருமுறை மின் ஊழியர்கள் வீட்டில் கடைகளில் என அனைத்து இடங்களிலும் எவ்வளவு மின் பயன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு குறிப்பிடுவர். அவ்வாறு கணக்கிட்டு குறிப்பிட்ட தேதியில் இருந்து இருபது நாட்களுக்குப் பின் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

20 நாட்கள் கழித்தும் மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் சமர்ப்பித்து மின் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படியும் செலுத்தத் தவறினால் அவர்களின் மின் வினியோகம் நிறுத்தப்படும் இதுதான் தற்போது வரை பொறியாளர்களுக்கு தமிழக மின் வாரியம் கூறியுள்ள உத்தரவு. மேலும் தற்போது முடிந்த கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு போடப்பட்டது.கொரோனா பரவல் இரண்டாம் அலையி தீவிரமாகப் பரவியது. அப்போதும் தமிழக அரசு ஏப்ரல் மே மாதங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. பொதுமக்கள் அச்சமயங்களில் வேலைவாய்ப்பு இன்றி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

அதனால் மக்களால் மின் கட்டணத்தை கட்ட இயலாது என அறிந்து மின் கட்டணம் செலுத்த வில்லை என்றாலும் மின் வினியோகம் நிறுத்தப்படுவதற்கு தடை விதித்தது. மேலும் தமிழக அரச தலைவர்களை ஏற்படுத்தியதும் மின் கட்டணம் செலுத்துவதற்கு கூடுதலான கால அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்பொழுது மின்வாரியத்தில் அதிக அளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இனி மின் கணக்கிட்ட தேதியில் இருந்து 20 நாட்களுக்கு முன்னதாகவே மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று புதிய உத்தரவை மின்வாரியம் பிறப்பித்துள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளாக 87 ஆயிரம் மின் இணைப்புகள் மின் கட்டணம் செலுத்தவில்லை. அவற்றின் மின்வினியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு நிறுத்தப்பட்ட மின் இணைப்புகள் சிலவற்றை இன்றளவும் செயல்பட்டு வருகிறது. அதனால் மின் வாரியத்திற்கு அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்கும் விதமாக, எத்தனை இணைப்புகள் நிறுத்தப்படும் மின் வினியோகம் செய்து வருகின்றது என்பதை ஆய்வு செய்து கணக்குகளை முடிக்குமாறு மின் வாரியம் கூறியுள்ளது.