கட்சி நிர்வாகிகளுக்கு சுயமரியாதை இருக்கக்கூடாது! டி ஆர் பாலு பரபரப்புப் பேச்சு!

0
64

காஞ்சிபுரத்தில் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் பொருளாளர் டி ஆர் பாலு உரையாற்றியபோது நீங்கள் மேயராக விரும்பினால் வீடு வீடாக ஏறியிறங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் கட்சியினரிடம் விரோதத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள், துரோகத்தை மறந்து விடுங்கள், அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபடுங்கள். தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் வழங்கப்பட்டனர். இதில் 90% நிறைவேற்றப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார் டி.ஆர். பாலு.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் நோய்த்தொற்று காலத்தில் பொதுமக்களில் பலர் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள், பலர் பட்டினி கிடக்கிறார்கள். இதன் காரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தெரிவித்தார்.

ஆனாலும் அப்போதைய அதிமுக அரசு ஸ்டாலினின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்கவில்லை அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் நான் முதலமைச்சர் பொறுப்பிற்கு வந்துவிட்டால் நிச்சயமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி அவர் முதல்வரான பிறகு அவர் சொன்னதை செய்தார் என்று தெரிவித்திருக்கிறார்.

தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என வசைப்படுகிறார்கள் என்று மாவட்ட செயலாளர் தெரிவிக்கிறார். அவர்கள் எப்போதும் மாலை போடுவார்களா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேபோல் நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது எவ்வளவு அடிபட்டிருப்பேன் தெரியுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் டி ஆர் பாலு.

மானம், ஈனம், சுயமரியாதை அனைத்தும் இல்லாமலிருந்தால் தான் கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். திமுகவில் இருக்கும் வரையில் தான் நமக்கு மரியாதை. டி ஆர் பாலு பெரிய ஆளாக இருக்கலாம், அகில இந்தியாவில் கொடிகட்டி பறந்து கொள்ளலாம். நாடாளுமன்றத்தில் மோடியின் பிடரியைப் பிடித்து இழுக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் டி ஆர் பாலு திமுக என்ற குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் போதுதான் அந்த மீனுக்கு சக்தி வெளியே தூக்கி போடப்பட்டால் கருவாடாக மாறிவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

நிர்வாகிகள் சரியாக நடந்து கொண்டால் சரியாக போற்றப்படுகிறார்கள், சரியாக நடக்காத நிர்வாகிகளை துச்சமென மதித்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடுவோம் என்று காட்டமாக உரையாற்றியிருக்கிறார் டி ஆர் பாலு.