மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற அசத்தல் திட்டம்!

0
53

வெகு காலமாகவே இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வேலைகள் நடந்து வந்தன.இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு இந்த திட்டம் தற்சமயம் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக வெகுகாலமாகவே மத்திய அரசு முயற்சி செய்து வந்தது. மத்திய அரசின் இந்த நீண்ட முயற்சி தற்சமயம் முடிவுக்கும் வந்திருக்கிறது. அதே சமயம் அந்த முயற்சியானது செயல்பாடாகும் மாறியிருக்கிறது.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று அங்கேயே தங்கி வேலை பார்த்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் காப்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.அதாவது இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு நபர் இந்திய நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு மேரா ரேஷன் ஆப் என்ற செயலியை அறிமுகம் செய்திருக்கின்றது. என்னுடைய ரேஷன் செயலி என்பதே இதன் அர்த்தம் என்று சொல்லப்படுகிறது. அருகில் இருக்கக்கூடிய நியாயவிலை கடைகளில் என்ன பொருட்கள் இருக்கிறது என்பதை இந்த செயலி மூலம் கைபேசியில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு உணவு பொருட்களை எந்த அளவிற்கு வாங்கிக் கொள்ளலாம், சமீபத்தில் பெற்றுக் கொண்ட பொருட்கள் மற்றும் அதன் பரிவர்த்தனைகள் ஆதார் இணைப்பு நிலவரம், போன்ற வசதிகளை இதன் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்.இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களுடைய தொடுதிரை போனில் இதனை பதிவிறக்கம் செய்து விவரங்களை கொடுத்து அதன் பிறகு அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.