எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்! பால் உற்பத்தியாளர்கள் வெளியிட்ட ஆபர்!

0
191
You can buy as many liters as you want! Milk producers released Abar!
You can buy as many liters as you want! Milk producers released Abar!

எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்! பால் உற்பத்தியாளர்கள் வெளியிட்ட ஆபர்!

ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ 42க்கும் , எருமை பாலுக்கு ரூ 51  வழங்க வேண்டும் எனவும் , விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவசமாக காப்பீடு செய்து தர வேண்டும் எனவும், கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்கிட வேண்டும், காலதாமதம் இன்றி பண பட்டுவாடா செய்ய வேண்டும்,

பால் கூட்டுறவு சங்கங்களின் பணி புரியும் ஊழியர்களை பணி வரையறை செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் கடந்த பத்தாம் தேதி முதல் கருப்பு பேட் அணிந்து கருப்புக்கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு பால்  உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் வாழப்பாடி ராஜேந்திரன் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பால் உற்பத்தியாளர்கள் மீண்டும் போராட்ட தொடங்கியுள்ளனர்.

மேலும் விவசாயிகள் கறவை  மாடுகளுடன் வந்து பால் உயர்வை உயர்த்தி கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 900 பால் கூட்டுறவு சங்க விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பால் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பால் விலையை  லிட்டருக்கு ரூ 7 உயர்த்தி கொடுத்து பால் உற்பத்தியாளர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் சேலம் மாவட்டத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பால்  உற்பத்தியாளர்கள் இன்று சேலம் பால்  கூட்டுறவு சங்கத்திற்கு பால் வாங்க வந்த மக்களுக்கு இலவசமாக பால் வழங்கி தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K