ஆளும் தரப்பை எச்சரித்த ராமதாஸ்! இறுதி கட்ட போராட்டத்திற்கு தயாரான இளைஞர் படை!

0
75

வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தன்னுடைய அடுத்த கட்ட போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக தெரிவித்த அந்த கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சமுதாயத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்ற ஒரு தரப்பினர் முன்னேற்றத்திற்காக 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தால், அதை நிறைவேற்றித் தருவது தானே அரசின் கடமையாக இருக்கும், தமிழக மக்கள் தொகையில் 25 சதவீத மக்களுடைய நலனை புறம்தள்ளிவிட்டு யாருடைய நலனுக்காக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. நியாயமான கோரிக்கைகளை 40 ஆண்டுகளாக போராடி நிறைவேற்ற முடியவில்லை இந்த நிலையில், இன்னும் எத்தனை வருடங்கள் போராடிக்கொண்டே இருந்துவிட இயலும். இந்த நிலை இவ்வாறு தொடர்வதை அனுமதிக்க இயலாது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் எங்களுடைய போராட்டம் முடிவடையாது.

பாமக, மற்றும் வன்னியர் சங்கம், சார்பாக அறிவிக்கப்பட்ட இருக்கின்ற போராட்டங்களின் அடுத்த கட்டமாக எதிர்வரும் 30ஆம் தேதி அன்று காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற 388 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இதுவரை நடந்த போராட்டங்களை விடவும் இது மிகப் பெரிய போராட்டமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.

அதற்காகவே அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு வீடாக போய் மக்களை சந்தித்து அவர்களுடைய ஆதரவைப் பெற வேண்டும். அதற்காக அனைத்து ஒன்றியத்திலும் 50 இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று இளைஞர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருக்கின்ற கிராமங்களில் எண்ணிக்கையை வைத்து ஒரு நாளைக்கு எட்டு கிராமங்கள் முதல் 15 கிராமங்கள் வரை பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு கிராமத்திற்கு சென்றவுடன், அந்த கிராமத்தில் இருக்கின்ற இளைஞர்களுடன் ஒன்றிணைந்து ஒவ்வொரு வீடாக சென்று வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து, நடைபெறவிருக்கும் போராட்டம் தொடர்பாக துண்டு பிரசுரங்களை வழங்கிட வேண்டும்.

அதிகபட்சமான குடும்பங்கள் இருக்கும் கிராமங்களில் நம்முடைய குழுவினர் பல பிரிவுகளாக பிரிந்து மக்களை சந்தித்து நம்முடைய போராட்டம் தொடர்பாக விளக்கம் அளித்திட வேண்டும் என்று திமுக அதிமுக போன்ற அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த வன்னிய சொந்தங்களை மற்றும் வன்னியர் சங்கத்தை சகோதர சமுதாய அனைவரையும் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு கேட்க வேண்டும் அவர்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்காக போராட்ட களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும்.

அந்த சமயத்தில் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவில் அவர்களுடைய கையெழுத்துக்களை பெற்று கொள்ள வேண்டும். 30ஆம் தேதி போராட்டத்திற்கு மக்களுடைய ஆதரவை பெறுவதற்காக இந்த போராட்டமானது உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, மூன்று தினங்கள் நடத்தப்படவேண்டும். ஊர்திகளில் பயணம் செய்யும் இளைஞர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், போக வேண்டும் அனைவரும் நிச்சயமாக தலைக்கவசம் மற்றும் முக கவசம் போன்றவற்றை அணிந்திருக்க வேண்டும்.

நம்முடைய கொள்கைகள் போன்றவற்றை விட உங்களுடைய பாதுகாப்பும் எதிர்காலம்தான் முக்கியம் இறுதிக்கட்ட போராட்டமாக அது விரைவாக அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் அதற்கு முன்பாக இது போன்ற ஒரு பிரம்மாண்டமான போராட்டம் இதுவரை நடந்தது கிடையாது. என்று தெரிவிக்கும் அளவிற்கு 30ஆம் தேதி மக்கள் கூட்டம் இருக்கவேண்டும். அனைத்து நிலை நிர்வாகிகளும் இதனை உறுதிப்படுத்த வேண்டும். நம்முடைய போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு ஒரு முன்னோட்டமாக நம்முடைய இளைஞர்கள் அர்த்தம் இருக்கின்ற இருசக்கர வாகன ஊர்தி பரப்புரை பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றார்.