நீங்க இந்த ஆபரேஷன் செய்ய போறீங்களா? ரூ 45,000 வரை நிதி உதவி தரும் தமிழக அரசு!

0
68

இந்த செய்தி பெண்களுக்காக தான். கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ரூ 45 ஆயிரம் வரை உதவி தொகை தருவதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

 

கர்ப்பப்பை என்பது பெண்களின் உடலில் ஒரு அங்கமாகும். பெண்களுக்கு முக்கியமாக கருதப்படுவது கர்ப்பப்பை தான். அங்குதான் குழந்தைகள் உருவாகின்றது. பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் கர்ப்பப் பையில்தான் ஏற்படுகின்றன. கர்ப்பப்பையில் புண், கர்ப்பபையில் கட்டி புற்றுநோய் கட்டி, கர்ப்பப்பை கீழே இறங்குதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வயதாகும் பெண்களுக்கு ஏற்படுகின்றது.

 

உடலில் ஒரு அங்கமாக இருக்கும் கர்ப்பப்பையை நீக்கி விட்டால் பெண்கள் வலுவிழந்து காணப்படுவார்கள். அதன்பின் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. மிகவும் வலுவிழந்து உடலில் உள்ள சக்தியை இழந்தது போல் காணப்படுவார்கள். அதேபோல் கர்ப்பப்பையை எடுத்து விட்டால் அதை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளும் பின் தொடர்ந்து வரும்.

 

கர்ப்பப்பையை இரண்டு முறைகளில் நீக்குவார்கள். அடிவயிற்று வழியாக நீக்குவார்கள். அல்லது கட்டி போன்ற பிரச்சினைகளால் வயிற்றில் வெட்டு போட்டு எடுத்து விடுவார்கள். இந்த மாதிரியான செயல்முறைகளை மற்றும் அதன் பின் வரும் பிரச்சினைகளை மனதில் கொண்டுதான் தமிழக அரசு இந்த மாதிரியான முடிவை எடுத்திருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

இதனால் தமிழக அரசு கர்ப்பப்பையை நீக்குதல் போன்ற அறுவை சிகிச்சைக்கு பெண்களுக்கு ரூ 45 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்குகிறது. பெண்களுக்கு ஒரு நல்ல உதவி தொகையாக இது அமைவதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

author avatar
Kowsalya