எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் முத்திரை பதிக்க வேண்டும்! கட்சியினருக்கு வேண்டுகோள்!

0
58

உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் தற்போது அங்கு பாஜக மிகப்பெரிய அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதற்கு காரணம் அங்கு இருக்கக்கூடிய மக்களின் மனதைக் கவரும் விதமாக அந்த கட்சி செயல்பட்டு வருவது தான் என்கிறார்கள்.

அதோடு உத்தரப் பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராமர் கோயில் கட்டும் பணியும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகவே அந்த கட்சி அங்கே அசுர பலத்துடன் திகழ்ந்து வருகிறது.

இந்தநிலையில் உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக கடைசி வெள்ளிக்கிழமை தெருக்கள், சாலைகளில், நமாஸ் நடத்தப்படவில்லை.

வழிபாட்டுத்தலங்கள், மசூதிகளில், அவர்கள் மத நிகழ்ச்சிகளை நடத்த முடியும் ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி அமைதியாக நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தில் எந்தவிதமான மதக்கலவரமும் நடைபெறவில்லை, மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகள் எப்படி அகற்றப்பட்டது என்பதை நீங்கள் கண்டிருக்கலாம் என தெரிவித்திருக்கிறார்.

மக்களின் உதவியாலும், எங்களுடைய கடினமான உழைப்பாலும், சட்டசபை தேர்தலில் மிக சிறந்த முடிவுகளை நாங்கள் பெற்றோம். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு தற்போதிருந்தே களத்தை தயார் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உத்தரப் பிரதேசத்தில் 75 இடங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு நாம் முன்னேற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்