நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்!!

0
201
#image_title
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்!
நேற்று அதாவது மே 19ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வி பெற்றதால் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
நேற்று அதாவது 19ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் பிரப்சிம்ரன் 2 ரன்களிலும், ஷிகர் தவான் 17 ரன்களிலும், அதர்வா டைய்ட் 19 ரன்களிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
 பின்னர் இனைந்த சாம் கரண் ஜிதேஷ் சர்மா ஜோடி ரன்குவிக்க தொடங்கியது. அதியடியாக விளையாடிய ஜித்தேஷ் ஷர்மா 44 ரன்களிலும் சாம் கரண் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷாருக்கான் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் சேர்த்தார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணியில் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசிய நவதீப் சைனி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர் ஆர் அணி வீரர் ஜாஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரருடன் இணைந்த தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாட தெடங்கினார். அதிரடியாக விளையாடிய தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்து 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸிவால் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சிம்ரான் ஹிட்மயர் அதிரடியாக விளையாடி 46 ரன்களும் ரியான் பராக் 20 ரன்களும் சேர்த்தனர். துருவ் ஜுரேல் 10 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களின் முடிவில் 189 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் பந்துவீச்சில் ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நேற்றைய போட்டியில் வெற்ற பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மெத்தம் 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் 7 தோல்விகள் பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பெங்களூரு, கொல்கத்தா, மும்பை ஆகிய அணிகளின் வெற்றி தோல்விகள் ராஜஸ்தான் அணியின் பிளே ஆப் வாய்பை உறுதி செய்யும்.
நேற்றைய போட்டியில் தோல்வி பெற்றதை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில் 6 வெற்றிகள் 8 தோல்விகள் பெற்று 12 புள்ளிகளுடன் நடப்பு ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இதனால் பஞ்சாப் அணி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.