நேற்றைய போட்டியில் சாதனை! முதல் வீரர் என்ற பெருமை இவருக்கே!

0
82

உலககோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்து வெளியேறிய பிறகு இந்தியா பங்கு பெறும் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸ் உடனாகும். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் களம்கண்டார்.

இதையடுத்து பேட்டிங் செய்த,
வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே சேர்த்தது.96 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் ஏமாற்றமளித்தார். இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 16 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் விராட் கோலி, பிட்ச் சிறப்பானதாக இல்லை. ஆனால்,போட்டிக்கு முந்தைய நாள்களில் மழைப்பொழிவு இருந்ததால், பிட்சை இதைவிட சிறப்பானதாகப் பராமரிக்க முடியாது என்று கூறினார்.

சைனி 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  சிறப்பாகப் பந்துவீசிய சைனி, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி ஓவரை வீசிய அறிமுக வீரர் சைனி, அதை மெய்டனாக வீசினார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் கடைசி ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here