ஆமாம் நான் பாஜக தான்.. உண்மையை பட்டென உடைத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணவர்!! நெருக்கடியில் சிக்கிய சீமான்!!

0
170
Yes, I am BJP. Seaman caught in crisis!!
Yes, I am BJP. Seaman caught in crisis!!

ஆமாம் நான் பாஜக தான்.. உண்மையை பட்டென உடைத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணவர்!! நெருக்கடியில் சிக்கிய சீமான்!!

ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதால் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளரை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டு விடுவதாக தெரிவித்ததோடு வேட்பாளராக மேனகா என்பவரை அறிவித்தது.தற்பொழுது வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

இவ்வாறு தேர்தல் வரும் பொழுது ஒவ்வொரு கட்சி குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் வரும் வேலையில் ஆளும் கட்சி குறித்து கூட இரு தினங்களுக்கு முன்பு பணம் பட்டுவாடா குறித்த வீடியோ வைரலானது.

இது ஒரு கட்சியை அடி சறுக்க மற்றொரு கட்சி போடும் திட்டம் என்றாலும் அனைத்து கட்சிகளும் இதனை சந்தித்து கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது நாம் தமிழர் கட்சிக்கும் புதிய விமர்சனம் ஒன்று வந்துள்ளது.

தற்பொழுது நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா என்பவரின் கணவர் பாஜகவில் பணிக்குழு பொறுப்பாளராக உள்ளார் என கூறி வருகின்றனர்.

சீமான் அவர்கள் எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் பாஜகவை கடுமையாக கண்டித்து பேசி வரும் வேலையில், தற்பொழுது இவ்வாறு பாஜக பொறுப்பாளராக இருக்கும் அவரது மனைவியை வேட்பாளராக நிற்க வைக்கலாமா என்றும், நாளடைவில்  அவர்களுடன் கூட்டணி இருக்குமா எனவும் பல கோணங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் வேட்பாளர் மேனகாவின் கணவர் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் ஒரு வருடத்திற்கு முன்பு பாஜக எம்எல்ஏ நடத்திவரும் ஓர் தனியார் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்தது உண்மைதான். ஆனால் தற்பொழுது அந்த  பள்ளியில் இருந்து வெளியேறி வேறொரு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன்.

அது மட்டுமல்லாமல் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கள் கட்சியின் பொறுப்பாளர் கார்த்திக் என்பவரை அவரது சொந்த மாமாவே குத்தி கொலை செய்துள்ளதால் அந்த பிரச்சனையை நான் பார்த்து வருகிறேன். இவ்வாறு இருக்கும் சூழலில் நான் எப்படி பாஜக நிர்வாகியாக இருக்க முடியும்?? ஏன் இவ்வாறான வதந்திகளை பரப்பி வருகின்றீர்கள்.

இதெல்லாம் எதிர்க்கட்சிகள் செய்கின்ற சதி, நேரடியாக களத்தில் சந்திக்காமல் தேர்தல் நேரத்தில் இவ்வாறு பல வதந்திகளை பரப்பி வாக்கு எண்ணிக்கையை குறைக்க நினைக்கின்றனர்.

எனவே பொதுமக்களை சந்தேகிக்கும் படி செய்யாமல், நேருக்கு நேர் மோதும் வகையில் களத்தில் சந்திக்க வேண்டும் என காட்டமாக கூறியுள்ளார்.