ஏற்காடு கோடைவிழா இன்று தொடக்கம்!! மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!!

0
113
Yercaud summer festival starts today!! Tourists are interested in seeing the flower exhibition!!
Yercaud summer festival starts today!! Tourists are interested in seeing the flower exhibition!!
ஏற்காடு கோடைவிழா இன்று தொடக்கம்!! மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!!
ஏற்காட்டில் 46வது கோடை விழா இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் கோடை விழா, மலர் கண்காட்சியை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு ஏற்காட்டில் குவிகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இன்று மாலை தொடங்கும் இந்த போட்டி வருகிற மே 28ம் தேதி 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இன்று தொடங்கும் இந்த கோடை விழாவை அமைச்சர்கள் கே என் நேரு, பன்னீர் செல்வம், மதிவேந்தன், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். அதைத் தொடர்ந்து துறை சார்பாக நிறுவப்பட்டுள்ள 42 அரங்குகளை திறந்து வைத்து பல நலத்திட்டங்களை வழங்கவுள்ளனர்.
அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியில் 10000 தொட்டிகளில் பெட்டூனியா மலர், சால்வியா மலர், மேரிகோல்டு மலர் உள்பட 45 வகையான மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
5 லட்சம் மலர்களை கொண்டு டிராகன் வாரியர், பொன்னியின் செல்வன் படகு, முயல், தேனி, சோட்டா பீம், போன்று பல உருவங்கள் மலர்களை பயன்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிராகன் வாரியருக்கு 32000 பூக்களும், சோட்டா பீமுக்கு 15000 மலர்களும், பொன்னியின் செல்வன் படகுக்கு 35000 மலர்களும், தேனிக்களுக்கு 28000 மலர்களும், முயலுக்கு 18000 மலர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பி பாயின்டுக்கு 27000 மலர்களும், வளைவிற்கு 55000 மலர்களும், பூங்கொத்துக்கு 50000 மலர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கோடை விழாவில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய உணவுகளை எவ்வாறு தயார் செய்வது என்பதை பற்றியும் செயல் விளக்கம் அளிக்கப்படுகின்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டம் சார்பில் மகளிருக்கு கோலப் போட்டி, சுற்றுலாத் துறை சார்பாக படகு போட்டி நடத்தப்படுகிறது.
மேலும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. கலை பண்பாட்டு துறையும் சுற்றுலாத் துறையும் ஒருங்கிணைந்து இந்த கோடை விழாவில் இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கால்பந்து போட்டி, கைப்பந்து போட்டி, கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல வகையான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றது.