சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீர்

0
146
#image_title

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீர்

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீரால் மீன்கள் மற்றும் இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் இருப்பதால் மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னை எண்ணூர் பகுதியில் இருக்கும் கொற்றலை எனப்படூம் கொசஸ்தலை ஆற்றினை நம்பி தான் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் தொழிலை நடத்தி வாழ்வாதாரங்களை பெருக்கி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொற்றலை ஆற்றில் மஞ்சள் நிறத்தில் கழிவு நீர் கலந்ததால் மீனவர்கள்  அதிர்ச்சிக்குள்ளானார்கள்.அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஆற்றில் மஞ்சள் நிறத்தில் கழிவு நீர் கலந்து வருகிறது.

இந்த கழிவு நீர் இப்படியே கலந்து கொண்டிருந்தால் மீன்கள் மற்றும் இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டுதங்களுடையவாழ்வாதாரம் பாதிக்கப்படும்நிலையில் இரூப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும் அருகாமையில் அமைந்திருக்க கூடிய தொழிற்சாலைகளில் இருந்து இதுவெளியேறி வருகிறதா என்றும் உடனடியாக மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுகின்றனர்.

author avatar
Savitha