தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்!

0
154
Yellow alert for 11 districts in Tamil Nadu! See if your town is in it!
Yellow alert for 11 districts in Tamil Nadu! See if your town is in it!

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி புயலாக வலுபெற்றது.

அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணாமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பினால் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மழையின் தாக்கம் சற்று குறைந்தது.அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும்  செயல்பட தொடங்கியது.கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை அனைத்தும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதனை தொடரந்து கடந்த இரண்டு நாட்களுக்கு தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

அதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாகவே கடலோரோ பகுதிகளில் மழை பொழிந்து வருகின்றது.அதனால் நேற்று தமிழகத்தில் கடலோரோ பகுதிகளான எட்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கபட்டிருந்தது.இந்நிலையில் இன்று தமிழகத்தில் 11மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் அதன் காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது .கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மலைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K