யாராவது இப்படி பண்ணுவாங்களா? இளைஞர் செய்த காரியத்தால் ஏற்பட்ட பரபரப்பு!

0
88

தேனி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

இந்த காலத்து இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையில் உள்ளனர். விதவிதமான போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதைதான் நாம் இதுவரைக்கும் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒருவர் தான் இறந்து விட்டதாக கூறி தனக்கு கண்ணீர் போஸ்டர் ஒன்றை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அனுமந்தன் பட்டியை சேர்ந்தவர் மிதுன். இவர் எப்பொழுதும் விதவிதமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை வைத்துக் கொண்டே இருப்பாராம்.

 

இந்நிலையில் திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை நான் இறந்துவிட்டேன் என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதோடு மட்டுமில்லாமல் அதை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார்.

 

மேலும் இறுதி சடங்கு பிற்பகலில் நடக்கும் என்றும், அந்தக் கண்ணீர் அஞ்சலி போஸ்டில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்ட உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பதறிக் கொண்டு ஓடி வந்து பார்த்த பொழுது மிதுன் உயிரோடு இருந்ததை பார்த்து அதிர்ந்து உள்ளனர்.

 

ஏன் இப்படி செய்தாய்? என்று உறவினர்கள் கேள்வி கேட்கையில், தான் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுதையும் அதேபோல் இதை விளையாட்டாக செய்ததாகவும் கூறியுள்ளார்.

 

இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரை திட்டி தீர்த்து உள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கும் வேளையில் இந்த மாதிரியான பொய்யான செய்திகளை கண்டு கோபம் அடைந்துள்ளனர். விளையாட்டாக செய்தது இறுதியில் வினையாக மாறியுள்ளது.

 

author avatar
Kowsalya