அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

0
163
worms-in-rice-easy-ways-to-get-rid-of-it
worms-in-rice-easy-ways-to-get-rid-of-it

அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் அரிசி மூட்டையாக எடுத்து வைத்து கொள்வார்கள். அதில் வண்டு புழு போன்றவை வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் அந்த காலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி, அரிசியை பாலீஷ் செய்யாமல் உபயோகித்தார்கள். ஆனால் இன்று, மாதந்தோறும் நமக்கு தேவையான அளவுகளில் அரிசியை வாங்குகிறோம். மாதாமாதம் வாங்கும்போதே நாம் உபயோகிக்கும் அரிசிகளில் வண்டு, புழு ஆகியவை வந்து விடுகிறது.

நாம் வாங்கும் அரிசி குறைந்த விலையோ, அதிக விலையோ அதில் புழு வந்துவிட்டால் நமக்கு மிகுந்த கஷ்டமாகிவிடும். அதனை சமைக்கவும் முடியாது. இதுவே கிராமப்புறங்களில் உள்ளவர்கள் சல்லடை கொண்டு சுத்தம் செய்வார்கள். அல்லது வெயில் காயவைப்பார்கள். ஆனால் தற்போது வேலைக்கு செல்பவர்களால் இதை எல்லாம் செய்ய முடியாது. ஆகையால் கையில் உள்ள பொருட்களை வைத்து அரிசியில் உள்ள புழுக்களை எப்படி விரட்டலாம் என பார்க்கலாம்.

நாம் கடையிலிருந்து அரிசியை வாங்கி வந்து அரிசி டப்பாக்களில் போடும் போது 2 அல்லது 3 மிளகாய் வற்றலை போட்டு வைக்கவும். இதிலிருக்கும் காரத்தன்மை புழுக்களை வர விடாது.

அடுத்து வெள்ளைப்பூண்டு, அரிசி டப்பாக்களில் ஒரு வெள்ளை பூண்டையோ அல்லது 10 பல் பூண்டையோ அதில் போட்டு வைக்கலாம். இதன் வாசனைக்கு புழுக்கள் வராது.

அடுத்ததாக வேப்பிலை ஒரு 3 அல்லது 4 கொத்து எடுத்து அரிசியில் போட்டு வைத்தாலும் புழுக்கள் வராமல் இருக்கும். அதே போல் அரிசி அல்லது பருப்புகளில் புழுக்கள் இருந்தால் அதை குளிர்சாதன பெட்டியில் ஒரு 15 நிமிடங்கள் வைத்தால் புழுக்கள் இறந்து விடும். ஆனால் இவற்றை சுத்தம் செய்வது கடினம். புழுக்கள் அதுவாகவே வெளியேறுவதற்கு ஒரு சின்ன வழிமுறைகளை பார்க்கலாம். 2 கொத்து வேப்பிலை, 7லவங்கம், 1 ஸ்பூன் மிளகுத்தூள், 10 பல் பூண்டு ஆகியவற்றை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு இதை சிறிது சிறிதாக எடுத்து தட்டி வைத்து கொள்ளுங்கள். இதை ஒரு அரை மணி நேரம் வெயிலில் காய வைத்தால், நன்கு காய்ந்து கெட்டியாக ஆகிவிடும். பிறகு இதை அரிசி இருக்கும் டப்பாக்களில் 1 அல்லது 2 போட்டு வைக்க வேண்டும். இது புழுக்களை உடனடியாக அகற்றி விடும். இந்த வில்லைகளை ஒரு மணி நேரம் அரிசியில் வைத்தால் போதும். அரிசியிலேயே இருந்தாலும் ஒன்றும் இல்லை.

டப்பாவை மூட வேண்டாம். புழுக்கள் தானாக வெளியே வந்து விடும்.

 

author avatar
CineDesk