உலகளாவிய நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 51 கோடியை கடந்தது!

0
77

சீனாவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் முதல் முறையாக நோய் பரவல் கண்டறியப்பட்டு அங்கே இந்த நோய் பரவல் மிகத் தீவிரமாக பரவி வந்தது. அங்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தி பெரும் அச்சத்தை உண்டாக்கியது.

அதோடு மட்டுமல்லாமல் சற்றேறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 220 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி இந்த நோய்த் தொற்று பாதிப்பு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது.

இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும் கூட நோய்த்தொற்று உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் இந்த நோய் தொற்று பாதிப்பு உருமாற்றமடைந்து அதனுடைய பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில் உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,84,24,416 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதோடு உலகம் முழுவதும் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 54,10,23,306 என அதிகரித்திருக்கிறது.

இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,62,66,427 என இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் இந்த எண்ணிக்கையானது 51,57,75,389 என இருந்தது. ஆனாலும் இந்த நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரையில் 63,32,463 பேர் பலியாகி இருக்கிறார்கள்.