அதிர்ச்சி! உலகம் முழுவதும் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 52.02 கோடியாக அதிகரிப்பு!

0
78

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று பரவல் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கிவருகிறது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஒரு முட்டுக்கட்டையாக இந்த நோய் தொற்று விளங்கி வருகிறது.

இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தடுப்பூசி பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும், இந்த நோய் தொற்று உருமாற்றமடைந்து அதிகரித்துவருகிறது.

டெல்டா, டெல்ட்டா பிளஸ் உள்ளிட்ட பெயர்களில் உருமாற்றமடைந்து பல நாடுகளில் இந்த நோய் தொற்று அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவ காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.02 கோடியாக அதிகரித்திருக்கிறது.

நோய்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் உலகம் முழுவதும் 47.48 கோடி பேர் குணமடைந்திருக்கிறார்கள். ஆனாலும் கூட இந்த நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் 62,86000க்கும் அதிகமானோர் பலியாகியிருக்கிறார்கள்.