அதிர்ச்சி! 43 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

0
53

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கொரோனா நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் அந்த நாட்டில் மட்டும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்தது இந்த நோய் தொற்று இதனை சீனாவின் அதிபர் நாங்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறோம் என்று விவரித்தார், அதோடு அவசரகால மருத்துவமனைகள் கட்டமைக்கப்பட்டன.

மேலும் சீனாவிலிருக்கின்ற அண்டை நாடுகள் மற்றும் மற்ற நாடுகளின் நபர்கள் அவரவர் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டதற்கிணங்க சீனாவிலிருந்து அண்டை நாட்டு மக்கள் அனைவரும் வெளியேறத் தொடங்கினார்கள்.

இங்கிருந்துதான் நோய்தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது அந்தவகையில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்தியாவிற்குள் இந்த நோய்த்தொற்று ஊடுருவியது.

பல கோடி உயிர்களை பலிவாங்கிய இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணி இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டது. அதன் பலனாக இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஒருவழியாக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், நோய்த்தொற்று உருமாற்றமடைந்து அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 43.5 கோடியை கடந்திருக்கிறது.

இதனடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது 43,57,91,336 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது .நொத்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 36,61,56,.426 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

அதோடு இந்த நோய்த்தொற்று தாக்குதலுக்கு இதுவரையில் 59,67,748 பேர் பலியாகியிருக்கிறார்கள். நோய்த்தொற்றுக்கு தற்போது 6,36,67,162 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுபவர்களில் 75, 613 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் பட்டியல்

அமெரிக்கா – பாதிப்பு- 8,05,67,757, உயிரிழப்பு – 9,73,119, குணமடைந்தோர் – 5,31,92,990

இந்தியா – பாதிப்பு – 4,29,24,102, உயிரிழப்பு – 5,13,812, குணமடைந்தோர் – 4,22,97,296

பிரேசில் – பாதிப்பு – 2,87,68,104, உயிரிழப்பு – 6,49,195, குணமடைந்தோர் – 2,61,83,623

பிரான்ஸ் – பாதிப்பு – 2,26,89,332, உயிரிழப்பு – 1,38,135, குணமடைந்தோர் – 2,06,66,313

இங்கிலாந்து- பாதிப்பு – 1,88,04,765, உயிரிழப்பு – 1,61,224, குணமடைந்தோர் – 1,71,53,253

 கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல்

ரஷ்யா – 1,62,91,116

ஜெர்மனி – 1,47,28,752

துருக்கி – 1,40,25,181

இத்தாலி – 1,27,64,558

ஸ்பெயின் – 1,09,77,524

அர்ஜெண்டீனா – 88,97,178

ஈரான் – 70,40,467

நெதர்லாந்து – 63,32,772

கொலம்பியா – 60,62,701

போலந்து – 56,60,493