அதிர்ச்சி! உலகளாவிய நோய்த்தொற்று பாதிப்பால் இறந்தவரின் எண்ணிக்கை 63.21 லட்சமாக அதிகரிப்பு!

0
75

நோய்தொற்று பரவல் உலகளவில் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதித்து வருகிறது. இந்த நோய் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், இருக்கின்றன.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்திலும் சரி, வர்த்தகத்திலும் சரி, ஏற்கனவே வளர்ச்சி பெற்ற நாடு தான் ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது தான் பொருளாதாரத்திலும், ஏற்றுமதியிலும், மெல்ல, மெல்ல, வளர்ந்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில், தற்போது இந்த நோய் பரவல் நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,57,61,218 என அதிகரித்திருக்கிறது. இந்த நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2,29,21,274 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், உலகம் முழுவதும் ஒரே நாளில் சுமார் 3,12,753 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இதில் புதிதாக சுமார் 701 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இதுவரையில் உலகம் முழுவதும் இந்த நோய்த்தொற்று காரணமாக, 63,21,260பேர் பலியாகியிருக்கிறார்கள் . இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 50,67,54,056 பேர் குணமடைந்திருக்கிறார்கள் ஒரே நாளில் 4,53,824 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 51,497 பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு ஒரேநாளில் 108 பேர் இந்த நோய் தொற்றால் அங்கே பலியாகியிருக்கிறார்கள்.

ஒரேநாளில் வடகொரியாவின் 66,680 பேரும், தைவானில் 53,023 பேரும், பிரேசிலில் 41,353பேரும், ஆஸ்திரேலியாவில் 17,763 பேரும், ஜப்பானில் 16,130 பேருக்கும் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.