உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி! ரஹானே தேர்வு 

0
209
#image_title
உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி! ரஹானே தேர்வு .
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டி வரும் ஜூன் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில்,  இந்த டெஸ்ட் சாம்யின்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  இன்று அறிவித்தது.
இந்திய அணியில் ரகானே இடம்பெற்றுள்ளார். 15 மாதங்களுக்கு பிறகு அவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 34 வயதான ரகானே 82 டெஸ்டில் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் விளையாடி தற்போது இந்த டெஸ்ட் சாம்பியன் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
ஸ்ரேயாஸ் அய்யர் முதுகுவலி காயத்தால் அவதிப்பட்டு வருவதால் அறுவை சிகிச்சை  செய்ய உள்ளார். இதனால் அவர் அணியில் இடம்பெறவில்லை. அவர் இடத்துக்கு ரகானே தேர்வாகி உள்ளார். சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷன் போன்ற வீரர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரகானே ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார். மேலும் டெஸ்டில் அனுபவம் வாய்ந்தவர். இதனால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ரகானே ஐபிஎல் போட்டியில் தற்போது வரை 5 ஆட்டத்தில் 2 அரை சதத்துடன் 209 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக்ரேட் 199.4 ஆகும். மேலும் சென்னை அணிக்கு இன்னும் 11 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் அவை அணைத்திலும் ரஹானே தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் திறமையை நிருப்பிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது, ரோகித்சர்மா (கேப்டன்) சுப்மன்கில், புஜாரா, வீராட் கோலி, ரகானே, லோகேஷ் ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட்.