உலக புகைப்பட தினம்: ஒரு நொடியில் எடுக்கும் அளவிற்கு வளர்ந்த புடைப்பட துறை வரலாறு

0
278

உலக புகைப்பட தினம்: ஒரு நொடியில் எடுக்கும் அளவிற்கு வளர்ந்த புடைப்பட துறை வரலாறு

அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஆற்றலைப் பெற்றது தான் புகைப்பட கலை. அந்த வகையில் அதன் படைப்பாளிகளை போற்றும் வகையில் வருடம் தோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதியை, “உலக புகைப்பட தினமாக” கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த வருடம் புகைப்படத்திற்கு 175 வது ஆண்டு. புகைப்படம் என்பது வெறும் ஒரு படம் அல்ல. அது படைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்த உதவும் ஒரு கலை. பல கருத்துக்களை ஒரே படத்தில் வெளிப்படுத்தும் இந்த புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. மேலும் உலகளவில் இந்த புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. மேலும் அனைத்து இடங்களிலும் இந்த புகைப்படத்தின் பயன்பாடு இருக்கிறது.

வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், அரசியல் மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, எதிர்காலத்தில் பின்வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான்.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் “டாகுரியோடைப்’ எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்டு 19 இல் பிரான்ஸ் அரசு “டாகுரியோடைப்’ செயல்பாடுகளை “ப்ரீ டூ தி வேர்ல்டு’ என்று உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், இந்த ஆகஸ்டு 19 ஆம் தேதி உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த புகைப்பட கலையின் சிறப்புகளில் சில:

மனிதர்கள் ஆயிரம் வார்த்தைகள் பயன்படுத்தி சொல்வதை ஒரு புகைப்படம் சுலபமாக உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் இந்த புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.

இவ்வளவு சிறப்போடு கூடிய ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட புகைப்படக்கலைஞர்கள் காத்திருக்கின்றனர்.

உலகிலேயே
சிறந்த நிழல் படம்…
காலம் தின்ற
கண்ணாடிக்குள் கரையான் அரித்த
அட்டையில்
ஒட்டியிருக்கும்
என் அம்மாவின்
சிரித்த முகம்! என்று புகைப்பட தினத்தில் கவிதை எழுதியுள்ளார் ஒரு கவிஞர்.

கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் 13ம் நூற்றாண்டில் தனது பயணத்தை தொடங்கிய புகைப்படக்கலை, தற்போது பல பரிமாணங்களையும் கடந்து நிற்கிறது. டிஜிட்டல் கேமிரா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமெனாலும் எளிதாக புகைப்படத்தை எடுக்கலாம்.

புகைப்படக் கலை வரலாறு

புகைப்படம் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் சமம்… ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன.

போட்டோகிராபி

1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார்.

ஒளியின் எழுத்து

போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

பிலிம் புகைப்படங்கள்

1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார்.

கேமரா அறிமுகம்

1900 இல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மில்லி மீட்டர் ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத்துறையையே புரட்டிப்போட்டது.

டிஜிட்டல் கேமராக்கள்

முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அதிர வைத்த ஐலான்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லததை ஐலான் சிறுவனின் புகைப்படம் உலகிற்கு உணர்த்தியது. சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது.

எளிதான புகைப்படக்கலை

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிதான செயலாக இருந்தது. ஆனால், தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. அனைவரும் தற்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கூட புகைப்படம் எடுக்கின்றன.
புகைப்படம்: மதன்

செல்போன் செல்ஃபிக்கள்

கேமராக்களில் மற்றவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தது போய் இப்போது செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. என்னதான் செல்போனில் செல்ஃபி எடுத்தாலும் கறுப்பு வெள்ளையில் அட்டென்சன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K