world heart day how to prevent heart attack in tamil-news4 tamil online tamil news breaking news
world heart day how to prevent heart attack in tamil-news4 tamil online tamil news breaking news
World Heart Day-How To Prevent Heart Attack in Tamil : உலக இதய தினம்: மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?

உலக இதய கூட்டமைப்பால் (World Health Federation) ஆண்டுதோறும் உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் 1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதியாக மாற்றப்பட்டது.

உலகில் அதிகப்படியான மரணம் மாரடைப்பால் தான் நிகழ்வதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்திருந்தது. இப்படி அதிகப்படியான மரணத்தை அளிக்கும் மாரடைப்பில் இருந்து நமது உடலையும் உயிரையும் காப்பது நமது தலையாய கடமை அல்லவா?

இந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப் பொருள் “இதயத்தை கவனி, வாழ்க்கையை அனுபவி” என்பதாகும் இதய நோய்கள் பல இருந்தாலும் மாரடைப்புதான் முக்கியமான நோயாக பார்க்கப்படுகிறது. கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வயதானவர்களுக்கு வந்து கொண்டிருந்த மாரடைப்பு, தற்போது இளைஞர்களுக்கு அதிக அளவில் வருவது ஏற்றுக் கொள்ள முடியாத உண்மையாக இருக்கிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் 2.3 கோடி மக்கள் இதயக் குழல் நோயால் மரணம் அடையக்கூடும் (உலகளவில் இந்த நோயினால் 31% பேர் மரணம்) எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்படி மாறி மாறி அச்சத்தை தந்துக் கொண்டிருக்கும் மாராடைப்பில் இருப்பது உங்களையும், உங்களின் குடும்பத்தாரையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியமானதாகும்.

மாரடைப்பின் அறிகுறிகள்:

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் 30 வயதுக்கு மேல் உள்ளோர் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறையும், இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

  1. மார்பின் நடுவில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் தாங்க முடியாத வலி.
  2. மூச்சடைப்பு, குளிர் வியர்வை, குமட்டல், தலைசுற்றல்.
  3. பொதுவாக நெஞ்சில் வலி ஏற்படும் போது மூச்சு வாங்கினால் அது மாரடைப்பு அல்ல பேனிக் அட்டாக்காகத் தான் இருக்கும். மார்பில் வலி ஏற்பட்டதுமே அதற்காக பதட்டமடைவது தான் காரணம்.

தடுக்கும் வழிமுறைகள்:

  1. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்றாகும்
  2. பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும். அதனால் நாம் சாப்பிடும் உணவில் அதிகம் கவனம் தேவை.
  3. மனஅழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ஒழுங்குபடுத்தும் பயிற்சிகளை செய்வது நல்லது.
  4. மாரடைப்பிற்கு புகை, மது, தேவையில்லாத உணவு, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவையே காரணமாக உள்ளன.
  5. புகைபிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்தினாலே 50 சதவீதம் மாரடைப்பு வருவதை தடுத்துவிடலாம்.

இந்த சிறப்பு உலக இதய தினத்தில்  நமது இதயத்தை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொள்வோம். இதய நலன் காத்திடுவோம்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.