கொரோனாவுக்கு முடிவு இல்லை… உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
141

கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அந்த கொடிய தொற்றான கொரோனாவை ஒழிக்க இயலவில்லை. அத்தகைய கொடிய கொரோனா தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

இதனால் பல்வேறு நாடுகளில் மீண்டும்  ஊரடங்கு மற்றும் பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. பின்னர் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைய தொடங்கியது.

மேலும் தடுப்பு மருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் வைரசின் தாக்கம் தற்போது வேகமெடுத்துள்ளது.  இந்த நிலையில் கொரோனா தொற்று முடிவுக்குவர நீண்ட காலம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதாளோம், ”கொரோனா பரவல் அதிகரிப்பால் பல்வேறு நாடுகளில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் கொரோனா பரவல் குறித்து பல்வேறு குழப்பங்கள், சிகிச்சையில் உள்ள சிக்கல்களால் வைரஸ் முடிவுக்கு வர நீண்டகாலம் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K