உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா!!

0
153
#image_title
உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா!
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 10 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி முடிவடையவுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை உலகடெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது வெளியிடப்படவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார். இதையடுத்து உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ள மைதானங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
நடக்கவிருக்கும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் போட்டிகள் இந்தியாவில் உள்ள 15 மைதானங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி, புனே, நாக்பூர், லக்னோ, இந்தூர், தர்மஷாலா, ராஜ்கோட், கவுஹாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மைதானங்களில் உலகக் கோப்பை தொடரை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனினும் எந்தெந்த போட்டிகள் எந்தெந்த மைதானங்களில் நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.