தமிழ் நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள்! மகிழ்ச்சியில் பிரபல நாயகி!

0
231
Working busy on tamil cinema actress got excited
Working busy on tamil cinema actress got excited

தமிழ் நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள்! மகிழ்ச்சியில் பிரபல நாயகி!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற கதாநாயகிகளுள் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.இவர் தன்னுடைய முக பாவனைகளால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.சென்னையைச் சிறந்த கீர்த்தி சுரேஷ் முதலில் மலையாள திரையுலகில் அறிமுகம் ஆனார்.பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.இதில் இவரது நடிப்பு அனைத்து சினிமா ரசிகர்களாலும் பேசப்பட்டது.

மேலும் ரஜினிமுருகன்,தொடரி,ரெமோ போன்ற திரைப்படங்களில் அவர் நடித்தார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் முக்கியமான ஒருவராக கருதப்பட்டார்.இவரின் நடிப்பும் பாவனையும் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்களும் இயக்குனர்களும் கூறுகின்றனர்.தற்போது தமிழ்,மலையாளம்,தெலுங்கு என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.தமிழில் சாணிக்காயிதம் என்ற படத்தில் இவர் நடிக்கிறார்.இதில் செல்வராகவன் நாயகனாக நடிக்கிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் இவர் நடித்துள்ளார்.

தீபாவளிக்கு இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மரக்கார் – அரபிக் கடலின்டெ சிம்ஹம் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.இந்த படம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளியிடப்படவில்லை.விரைவில் இந்த படம் வெளியாகும்.

மேலும் மலையாளத்தில் வாசி என்ற திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.தெலுங்கில் ஆதி, ஜெகபதி பாபுடன் குட்லக் சகி என்ற நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மகேஷ் பாபுவுடன் நடித்துவரும் சரக்கு வாரி பாட்டா 2022 ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. மூன்று மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துக் கொண்டிருப்பவருக்கு மேலும் இரு வாய்ப்புகள் வந்துள்ளன.

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளனர்.அதேபோல் ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கவும் கீர்த்தி சுரேஷை கேட்டுள்ளனர்.மொத்தத்தில் கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சியாகவும் பரப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.

author avatar
Parthipan K