குடி போதையில் ஓடும் இரயிலில் ஏறிய தொழிலாளி… இரண்டு கால்களும் துண்டாகின… இரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரப்பு!!

0
40

 

குடி போதையில் ஓடும் இரயிலில் ஏறிய தொழிலாளி… இரண்டு கால்களும் துண்டாகின… இரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரப்பு…

 

குடி போதை மயக்கத்தில் இருந்த தொழிலாளி ஒருவர் ஓடும் இரயில் ஏற முயன்றுள்ளார். அப்பொழுது கீழே விழுந்து அவருடைய இரண்டு கால்களும் துண்டானது. இந்த சம்பவம் இரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் உள்ள முடி திருத்தும் கடையில் அதாவது சலூனில் வேலை பார்த்து வந்தார்.

 

நேற்று(ஆகஸ்ட்20) காலையில் திருப்பூர் இரயில் நிலையத்திற்கு வந்த மாரிமுத்து அவர்கள் குடி போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் இரயில் நிலையத்தில் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். பின்னர் இரயில் நிலைய வளாகத்தில் படுத்து தூங்கினார். அப்பொழுது அங்கு வந்த ரோந்து காவலர்கள் மாரிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினர்.

 

இதையடுத்து சிரித்துக் கொண்டே முன்னுக்குப்பின் முரணாக ரோந்து காவலர்களிடம் மாரமுத்து பதில் அளிதுள்ளார். பின்னர் மாரிமுத்துவை எச்சரித்த காவலர்கள் அவரை இரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறினர். இரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லாமல் மீண்டும் மாரிமுத்து இரயில் நிலையத்தில் சுற்றிக் கொண்டு மீண்டும் இரயில் நிலைய வளாகத்தில் படுத்து உறங்கினார்.

 

இந்நிலையில் அவர் படுத்துக் கொண்டிருந்த இரயில் மேடைக்கு பாலக்காட்டில் இருந்து ஈரோடு செல்லும் இரயில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இரயிலில் இருந்து இறங்கி ஏறினர். பின்னர் பாலக்காடு ஈரோடு இரயில் புறப்பட்டு சென்றது.

 

அப்பொழுது தீடிரென்று தூக்கத்தில் இருந்து எழுந்த மாரிமுத்து ஓடும் இரயிலில் ஏறுவதற்கு சென்றார். குடி போதையில் இருந்ததால் தடுமாறிய அவர் நடைபாதைக்கும் இரயில் தண்டவாளத்திற்கும் இடையே விழுந்தார். இதில் மாரிமுத்துவின் இரண்டு கால்களும் தண்டவாளத்திற்கும் இரயிலுக்கும் இடையே சிக்கியது. இரயில் வேகமாக சென்றதால் மாரிமுத்துவின் இரண்டு கால்களும் நசுங்கி துண்டானது.

 

இந்த விபத்தில் இரத்த வெள்ளத்தில் மாரிமுத்து துடித்துக் கொண்டிருந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரிமுத்துவை திருப்பூர் காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் மாரிமுத்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.