தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட பிரமுகர்! நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி!

0
70
Worker wanted in worker murder case! DMK MP to appear in court
Worker wanted in worker murder case! DMK MP to appear in court

தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட பிரமுகர்!  நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பத்தில் ஒரு முந்திரி தொழிற்சாலை உள்ளது. இது கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷுக்கு சொந்தமான தொழிற்சாலை ஆகும். அந்தத் தொழிற்சாலையில் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசன் என்ற நபர் வேலை செய்து வருகிறார். இவருக்கு வயது 55. இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி இவர் மர்மமான முறையில் இறந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் இதற்கிடையே அவர் முந்திரியை எடுத்து திருடி வைத்துக் கொண்டதாகவும் அதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோவிந்தராசனின் மகன் செந்தில் தனது தந்தையை எம்பி மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் அடித்து கொலை செய்து விட்டதாகவும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் பாமக சார்பில் பாமாகவினர் முதல்வருக்கு கோரிக்கை வைத்து கொண்டே இருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க அரசு உத்தரவிட்டது. அதன் பெயரில் கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி சிபிசிஐடி போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அங்கு இது குறித்து தீவிர விசாரணை நடந்து வந்த நிலையில் கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனையின் அறிக்கை வெளியானது.

அதில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. எனவே சந்தேக மரணம் என்று இருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி கடலூர் பதிவு செய்தனர். அதன் பேரில் எம்.பி, அவரது உதவியாளர் நடராஜ் என்ற 31 வயது நபர், தொழிலாளர்கள் அல்லாபிச்சை என்ற 53 வயது நபர், சுந்தர் என்ற சுந்தர்ராஜன் என்ற 31வயது நபர், வினோத் என்ற 31 வயது நபர், மற்றும் கந்தவேல் என்ற 43 வயது நபர் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கைது செய்ததை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத், கந்தவேல் ஆகியோரை கைது செய்தனர். அப்போது நடந்த விசாரணையின் போது எம்.பி.யின் உதவியாளர் நடராஜ் திடீரென மயங்கி விழுந்து விட்டார்.

இதையடுத்து அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதை தொடர்ந்து அல்லா பிச்சை உள்ளிட்ட 4 பேர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திமுக எம்.பி ரமேஷிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அவர் கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.