மகள் தாய்ப்பால் கேட்டதும் கோமாவிலிருந்து எழுந்த தாய்: இரு அதிசய நிகழ்ச்சி
மகள் தாய்ப்பால் கேட்டதும் கோமாவிலிருந்து எழுந்த தாய்: இரு அதிசய நிகழ்ச்சி
வடக்கு அர்ஜென்டினாவை சேர்ந்த 42 வயது மரியா என்ற பெண் ஒருவர் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் கோமாவில் இருந்து நினைவு திரும்பவில்லை.
இதனால் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அவரது கணவர் தனது மனைவி எப்படியும் மீண்டும் வருவார் என்றும் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்
இந்த நிலையில் சமீபத்தில் தனது இரண்டு வயது மகளுடன் மரியாவின் கணவர் கோமாவில் இருந்த மரியாவை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அந்த இரண்டு வயது குழந்தை அம்மாவை பார்த்ததும் கட்டி அனைத்து தனக்கு பசிக்கிறது தாய்ப்பால் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து பெரும் ஆச்சரியம் நிகழ்ந்தது
இரண்டு மாதங்களுக்கு மேலாக கோமாவில் சுயநினைவின்றி இருந்த மரியா திடீரென கண் விழித்து தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்தார். இதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் அதில் ஒரு சோகம் என்னவென்றால் தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன் மீண்டும் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். இருப்பினும் மரியா விரைவில் சுயநினைவு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்