பிரசவத்திற்கு வந்த பெண்.. தவறான சிகிச்சையால் பலியா? உறவினர்கள் போராட்டம்..!

0
119

தவறான சிகிச்சையால் தாய் சிசு உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திண்டிவனம் மாவட்டம், எந்தூர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், சந்தியா மூன்றாவது முறையாக கர்பமடைந்தார். அவரது கர்பகாலத்தில் பரிசோதனை செய்து வந்த பிரம்மதேச ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் கடந்த 6ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி சௌந்தரராஜனிடன் கையெழுத்து பெற்றுள்ளனர். அதன்பின், அவருக்கு 2 மணி நேரம் வரை சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவரது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து வெளியில் இருந்து மருந்துகள் வாங்கி வர கூறியுள்ளனர்.

ஆனாலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவரை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கடந்த 11ம் தேதி அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையால் சந்தியாவும் குழந்தையும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்க்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். இது குறித்து அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், சந்தியாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது