சொந்த ஊரிலேயே சூனியம்.. அதிர்ந்து போன எடப்பாடி!! தேர்தலால் வந்த வினை!!

0
212
#image_title

சொந்த ஊரிலேயே சூனியம்.. அதிர்ந்து போன எடப்பாடி!! தேர்தலால் வந்த வினை!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து வெற்றிவாக சூடியுள்ள நிலையில் அதிமுக தன்னிச்சையாக நின்றது.

தனது கூட்டணி கட்சிக்கு கூட ஆதரவளிக்க முடியாத நிலையில் பனிப்போர் நிலவி வந்த சூழலில் கட்டாயம் இதில் வெற்றி அடைந்தே தீருவோம் என கூறி பல யுக்திகளை உபயோகம் செய்தது.

திமுகவிற்கு இணையாக வெள்ளி கொலுசு என ஆரம்பித்து பணம் என அனைத்திலும் சற்று ஆடம்பரமாக இந்த தேர்தலுக்கு மட்டும் செலவு செய்திருந்தாலும் அதிமுக நினைத்தது எதுவும் நிறைவேறவில்லை. மேலும் இபிஎஸ் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வந்த பொழுது கட்டாயம் அதிமுக முழுவதும் எடப்பாடி வசம் ஆகிவிட்டது எனவே இந்த தேர்தலில் வெற்றி சூடும் என பலர் எண்ணி வந்தனர்.

ஆனால் அனைவரும் எதிர்பார்க்காத வண்ணம் திமுகவே தனது கூட்டணி கட்சியுடன் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி அடைந்தது. இதனை எதிர்க்கும் வகையில் எடப்பாடியின் சொந்த ஊரான சேலத்திலேயே அவருக்கு எதிராக பல கண்டனங்கள் எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டிக்கிறோம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்த இயக்கத்தை அளித்துக் கொண்டிருக்கும் பழனிச்சாமியை வெளியேறு வெளியேறு என்ற வகையில் வாசகங்கள் அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி கட்சியை அடியோடு அழித்துக் கொண்டிருக்கும் பழனிச்சாமியை வெளியேறு என்றும் கூறியுள்ளனர் இது அனைத்தும் ஈரோடு இடைத்தேர்தலில் தோல்வியுற்றதன் விளைவு தான் என கூறுகின்றனர். சொந்த ஊரிலேயே இவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் எடப்பாடிக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.