இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?

0
54

இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைவதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் மே 4 முதல் 28 வரை மொத்தம் 25 நாட்கள் வரை அக்னிநட்சத்திரம் நீடிக்கும். கோடை வெயில் சுட்டெறிக்கும் சூழலில் இந்த அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.

இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த மாதம் மே நான்காம் தேதி ஆரம்பித்த அக்னி நட்சத்திரம் காரணமாக தமிழ்நாட்டில் வெயில் படிப்படியாக உயர்ந்தது. பல இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத்(Faranheit) தாண்டி சுட்டெரித்தது.

இந்நிலையில் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது.

கரூர், வேலூர், திருத்தணியில் தலா 105 டிகிரி வெப்பம் பதிவானது. இதனையடுத்து சேலம், பாளையங்கோட்டை, திருச்சி, திருப்பத்துர் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரியும், ஈரோட்டில் 104 டிகிரியும் வெப்பம் நிலவியது.

மதுரை -101
தருமபுரி -101
நாகை -100,

பரங்கிப்பேட்டை -100 என பல இடங்களில் வெயில் நேற்று சதமடித்தது.

இவ்வெயிலின் தாக்கத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது என்று மக்கள் அச்சம் கொள்கின்றனர். மேலும் இதே போன்று வெயிலின் தாக்கம் நீடித்தால் புவி வெப்பமயமாகி நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை மக்கள் சந்திக்க நேரிடும் என புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K