பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு!!

0
64

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவத் தொடங்கியது.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலின் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் இறுதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு தடை விதித்தது.

அதை தொடர்ந்து, பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களான பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இம்மாத இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி பள்ளிகள் திறப்பு குறித்தும் மற்றும் பத்து  முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சென்னையில் முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பொது தேர்வுக்கான ஏற்பாடுகள், மாணவர் சேர்க்கை விபரம், அரசு பள்ளிகளின் ஆசிரியர் எண்ணிக்கை மற்றும்  பள்ளி கட்டட ஆய்வு விபரம் குறித்த விபரங்களுடன் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K