இந்த மாதத்தில்தான் தடுப்பூசி வருமா?

0
51

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதில் ஒரு சில நிறுவனங்களின் மருந்துகள், இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. உலகளவில் 2.25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவில்  கொரோனா தடுப்பூசி, இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என்று சீனாவின் ‘சைனோ பார்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் தலைவா் லியு ஷிங்ஷென் பேசும்போது கொரோனா தடுப்பு மருந்து, வரும் டிசம்பா் மாத இறுதியில் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவா்களுக்கும், பணியாளா்களுக்குமே அந்தத் தடுப்பூசி அவசர தேவையாக உள்ளது. மக்கள் நெருக்கம் குறைந்த தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு கொரோனா தடுப்பூசி இருக்காது என்று அவர் கூறினார்.

author avatar
Parthipan K