2021 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே திட்டம் போட்ட அதிமுக…! மக்களிடம் பலிக்குமா ஆளும்கட்சியின் பாய்ச்சா…!

0
87

நீட் நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டில் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது இந்த நிலையில் அரசுப் பள்ளி மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு என்பது கனவாகவே இருந்து வருகிறது.

நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என ஒருபுறம் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர் ஆளும் கட்சியான அதிமுக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து இருக்கின்றது இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதில் இருந்து உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி தப்பித்துக் கொண்டே வரும் மத்திய அரசு ஒருபுறமிருக்க இந்த இந்த வருடம் நிச்சயமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த மாதம் பதினைந்தாம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை தமிழக ஆளுநருக்கு அனுப்பி இருக்கின்றது இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இன்று வரை இழுத்தடித்து வருகிறார் ஆளுநர்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு தருவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வேண்டும் எனவும் திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர் பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஒப்புதல் வழங்கும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழக அரசு நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறது.

ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்காமல் தமிழக அரசு சார்பில் அரசாணை ஒன்றை வெளியிட்டு ஜெயலலிதா செய்ததுபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி இருக்கிறார்.

இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அழுத்தம் தந்து வருகின்றார்கள் செவ்வாய்க்கிழமை அன்று தமிழக அரசு சார்பில் 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் இதன்காரணமாக இந்த பிரச்சனை தேர்தல் அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது என்று சொல்லப்படுகிறது இது தேர்தல் நேரம் என்பதால் மிகுந்த கவனமுடன் செயல்படும் மாநில அரசு எப்படியேனும் இந்த வருடம் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்களின் சேர்க்கை நடத்தி விட எண்ணியிருக்கிறது.

இச்சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் அதனை அரசியல் ரீதியாக அனுபவித்துக் கொள்ளும் வாய்ப்பானது அதிமுகவிற்கு இருக்கின்றது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் பெற்றுக் கொடுத்தோம் என்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியும் என்று அந்த கட்சி திட்டம் போட்டு செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள் ஆனால் கடந்த வருடங்களில் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை அது குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் கசப்புத்தன்மையை மறக்கச்செய்ய முடியும் என்று கூறுகிறார்கள்.

ஆளுநர் 7.5 சதவீத இட ஒதிக்கீடு சட்ட மசோதாவிற்கு அனுமதி அளித்தால் அதை முன்வைத்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் அரசியல் லாபம் பெறுவதற்கு தயாராக இருக்கிறார்கள் இந்த விவகாரத்தில் திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளின் குடைச்சல்களை குறைத்து எடை போட இயலாது இட ஒதுக்கீடு விவகாரம் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்பார்த்து மட்டுமல்லாது தேர்தல் நேரம் என்பதால் தமிழக ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பாகவும் மாறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.