ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யுமா இந்திய அணி!

0
73

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கின்றது முன்னரே தொடரை இழந்து விட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்யுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கின்றன இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது இதில் சிட்னியில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் 66 பேர் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது உடன் தொடரையும் 0-2 இன்றைய கணக்கில் இழந்துவிட்டது.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் இருக்கின்ற மானுகா ஓவல் மைதானத்தில் இன்றையதினம் நடைபெறுகின்றது.

முதல் இரண்டு போட்டிகளை பொருத்தவரையில் இந்திய அணி 300 ரன்களை கடந்து பேட்டிங்கில் ஒரு அளவிற்கு நன்றாகத்தான் செயல்பட்டது ஆனாலும் பந்து வீச்சு மிக மோசமாக இருந்துவிட்டது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் பந்துவீச்சு எடுபடவில்லை. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இரு ஆட்டங்களையும் சேர்த்து மொத்தம் 60 ரன்களை வாரி வழங்கி இருக்கின்றார்கான்பெர்ரா மைதானமும் பிளாட்டிற்கு உகந்ததுதான் இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் பந்துவீசி நெருக்கடி கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது முகமது சாமி ஜஸ்பிரித் பும்ரா நவ்தீப் சைனி ஆகியோரின் இருவருக்கு ஓய்வு அழித்துவிட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் பி நடராஜன் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பெறலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது ஐபிஎல் போட்டியில் மொத்தம் 71 யார்க்கர் பந்துகளை வீசி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தைச் சார்ந்த நடராஜன் சர்வதேச போட்டியில் கால் பதிப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது.

தொடரை இழந்து இருந்தாலும் கூட அடுத்துவரும் தொடரை நம்பிக்கையுடனும் கூடுதல் உற்சாகத்துடனும் எதிர்கொள்வதற்கு இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமானதாகும்.

இன்னும் 23 ரன்கள் எடுத்தால் 12,000 ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பதற்காக காத்திருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஸ்ரேயாஸ் அய்யர் லோகேஷ் ராகுல் ஹர்திக் பாண்டியா போன்றோர் ஒன்றிணைந்து பேட்டிங்கில் சரியாக ஆடினால் எதிர் அணிக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் வெற்றி பெற்றுவிடலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.