மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆளுநர் பிரச்சனை பேசப்படுமா? எம்பிக்கள் கூட்டம்!!  

0
34
Will the governorship issue be discussed in the rainy session? MP's meeting on 14th July!!
Will the governorship issue be discussed in the rainy session? MP's meeting on 14th July!!

மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆளுநர் பிரச்சனை பேசப்படுமா?  எம்பிக்கள் கூட்டம்!!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20  ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  ஜூலை 1 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார்.

மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம் 28 ஆம் தேதி திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளதுள்ளார்.

இந்த கூட்டத்தில் மணிப்பூர் விகவரம், மத்திய அரசின் அவசர சட்டம், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது, மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மௌனம் சாதிப்பது, வணிகம், ஒரே மாதிரியான சிவில் சட்டம் இன்னும் பல விவகாரங்களை பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று ஏதிர்பார்க்கபடுகிறது. அதனியடுத்து அனைத்து கட்சி கூட்டம் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர் கட்சிகள் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வரும்  ஜூலை 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் காலை 10.30  அளவில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.

இதில் மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் திமுக சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்த கொள்ள உள்ளார்கள். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து எம்.பி., க்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

அதில் முக்கியமாக கவர்னர் ஆர்.என்.ரவி பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இந்த கூடத்தில் அனைத்து மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

author avatar
Jeevitha